வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்

Varam Kaettu Varugintren Iraiva

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்
குரல் கேட்டு அருளாயோ தலைவா

பகை சூழும் இதயத்தின் சுவரை யெல்லாம் - என்
பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன்
புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் - உன்
பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்

நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் - இனி
நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன்
பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் - என்
பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்