தியாக தீபம் இயேசுவின் திருவுடல் இதுவே

Tiyaka Tipam

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

தியாக தீபம் இயேசுவின் திருவுடல் இதுவே
தேடும் நெஞ்சம் தேற்றவரும் திரு உணவிதுவே -_ 2
அன்பு நெஞ்சம் கொண்டவரே உண்ண வாருங்கள்
உணவை உண்டு தனையளித்து தரணி மாற்றுங்கள்

கோதுமை மணியின் பலியினிலே இந்த வெள்ளை அப்பம் பிறக்கின்றது
என்றும் ஏங்கிடும் மாந்தர் வாழ்ந்திட தன்னை தியாகமாய் தருகின்றது
இதை உண்ணும் யாவரும் தன்னை பிறர்க்கென அளித்திட கேட்கின்றது
நம்மையும் உணவென நாம் கொடுப்போம் - பிறர்
நலமுடன் வாழ்ந்திட உயிர் கொடுப்போம் -_ தியாக தீபம் (2 lines)

விருந்தினில் கலந்திடும் பொழுதினிலே நெஞ்சில் வேத உணர்வுகள் வருகின்றன
ஏழ்மை அடிமைகள் உயர்வு தாழ்நிலை என்ற பிரிவுகள் இ¢றக்கின்றன
பிறர் பணிகள் செய்வதே தலைவன் பண்பென்ற படிப்பினைத் தருகின்றது _ 2
விருந்தினில் கலந்திடும் பொருளுணர்வோம் - பிறர்
பணி செய்து வாழ்வதில் நிறைவடைவோம் ---------_ தியாக தீபம் (2 lines)