புது வானம் ஒன்றும் புது வையம் ஒன்றும் - இந்தப்

Putu vanam onnum putu vaiyam onrum

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

புது வானம் ஒன்றும் புது வையம் ஒன்றும் - இந்தப்
பூமியில் மலர்ந்திடக் கண்டேன்
புது வாழ்வு ஒன்றும் புது ஆட்சி ஒன்றும் - இந்தப்
பொழுதினில் புலர்ந்திடக் கண்டேன்

எங்கும் இளமை இளமை இளமை
எங்கும் வளமை வளமை வளமை
எங்கும் புதுமை எங்கும் இனிமை

போவதோ பெரும் பயணங்கள் - நம்
பாதையில் பல தீபங்கள்
நாவினில் இன்பக்கீதங்கள் - நம்
நெஞ்சினில் நன்றி உணர்வுகள்

கண்டதோ என்றும் நன்மைகள் - நாம்
கூறுவோம் இன்று நன்றிகள்
வென்றதோ பல உள்ளங்கள் - தெய்வம்
வாழ்ந்திடும் அன்பு உள்ளங்கள்