மகிழ்வினை விதைத்திட

Makilvinai vitaittiṭa

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

மகிழ்வினை விதைத்திட
மனங்களை உயர்த்திட
உறவினராய் வருவோம்
மன்னவன் இயேசுவின் பொன்வழி நடந்திட
அன்பினில் வாழ்ந்திடுவோம்
இறை அன்பினில் வாழ்ந்திடுவோம் – மகிழ்வினை

இதயங்கள் இணைக்கும் அன்புக்கு இணையாய்
பூமியில் ஒன்றுமில்லை -- 2
இறைவழி வாழ்ந்திடும் முறை இது தெரிந்தால்
பகைமையில் தொல்லை இல்லை – 2
பிரித்திடும் சுயநல வேர்களை அறுப்போம்
புதுவழி படைத்திடுவோம் -- 2
நாம் இறைவழி வாழ்ந்திடுவோம் – மகிழ்வினை

மனிதனின் உரிமைகள் மறுத்திடும் சமூகம்
இறைவனின் குடும்பமில்லை – 2
எளியவர் வாழ்வுகள் அழிவது தொடர்ந்தால்
இறைவனும் உயிர்ப்பதில்லை -- 2
அனைவரும் வாழ்ந்திட நம்மையே அளிப்போம்
புதுவழி படைத்திடுவோம் -- 2
நாம் இறைவழி வாழ்ந்திடுவோம் – மகிழ்வினை