இயேசுவே உன்னை என் நெஞ்சினில் தாங்கி

Iyecuve unnai en nencinil tanki

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

இயேசுவே உன்னை என் நெஞ்சினில் தாங்கி
எந்நாளும் பிரியாமல் நான் வாழ வேண்டும்-2
இதயத்தில் வாழும் தெய்வம் நீ இருக்க
இமயம் போன்ற துன்பம் இல்லாது மறையும்
இனி எந்தன் வாழ்வில் இன்பமே நிறையும்

கண்களில் உன்னை சிறை வைத்தால் என்றும்
கரைந்திடும் விழிநீரில் கரைந்திடுவாய் - என்று -2
உள்ளத்தில் உன்னையே செதுக்கி வைத்தேன்-2
உயிர் உள்ளவரை உன்னுடன் வாழ்வதற்கே---இயேசுவே

பாதத்தில் அமர்ந்து உன் முகம் பார்த்து உந்தன்
உயிருள்ள வார்த்தையை கேட்டிடுவேன்-2
மார்பினில் சாய்ந்து நான் அன்போடு-2
என் இன்ப துன்பங்கள் பகிர்ந்திடுவேன்—இயேசுவே