எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்

Enathu Janamae Naan Unakku Enna Theengu Seithaen Sol

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல்
எதிலே உனக்கு துயர் தந்தேன் எனக்கு பதில் நீ கூறிடுவாய்

எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக் கொண்டு வந்தேனே
அதனாலே உன் மீட்பருக்குச்
சிலுவை மரத்தை நீ தந்தாய் ! - எனது சனமே

நாற்பது ஆண்டுகள் நான் உன்னை
பாலைநிலத்தில் வழிநடத்தி
உனக்கு மன்னா உணவூட்டி
வளமிகு நாட்டினுள் வரச் செய்தேன்
அதனாலோ உன் மீட்பருக்கு
சிலுவை மரத்தை நீ தந்தாய் - எனது சனமே

நான் உனக்காக எகிப்தியரை
அவர் தம் தலைச்சன் பிள்ளைகளை
வதைத்து ஒழித்தேன் நீ என்னைக்
கசையால் வதைத்துக் கையளித்தாய் - எனது சனமே

பாரவோனைச் செங்கடலிலாழ்த்தி
எகிப்தில் நின்றுனை விடுவித்தேன்
நீயோ என்னைத் தலைமையாம்
குருக்களிடத்தில் கையளித்தாய்! - எனது சனமே

நானே உனக்கு முன்பாக
கடலைத் திறந்து வழி செய்தேன்
நீயோ எனது விலாவை ஓர்
ஈட்டியினாலே திறந்தாய்! - எனது சனமே

மேகத்தூணில் வழிகாட்டி
உனக்கு முன்னே நான் சென்றேன்
நீயோ பிலாத்தின் நீதிமன்றம்
என்னை இழுத்துச் சென்றாயே! - எனது சனமே

பாலைவனத்தில் மன்னாவால்
நானே உன்னை உண்பித்தேன்
நீயோ என்னைக் கன்னத்தில்
அடித்துக் கசையால் வதைத்தாயே! - எனது சனமே

இனிய நீரைப் பாறையினின்று
உனக்குக் குடிக்கத் தந்தாயே!
நீயோ கசக்கும் காடியை
எனக்குக் குடிக்கத் தந்தாயே! - எனது சனமே

கானான் அரசரை உனக்காக
நானே அடித்து நொறுக்கினேன்
நீயோ நாணல் தடி கொண்டு
எந்தன் சிரசில் அடித்தாயே! - எனது சனமே

அரசர்க்குரிய செங்கோலை
உனக்குத் தந்தது நானன்றோ
நீயோ எந்தன் சிரசிற்கு
முள்ளின் முடியைத் தந்தாயே! - எனது சனமே

உன்னை மிகுந்த வன்மையுடன்
சிறந்த நிலைக்கு உயர்த்தினேன்
நீயோ என்னை சிலுவை எனும்
தூக்கு மரத்தில் தொங்க வைத்தாய்! - எனது சனமே