உமக்குப் பிரியமானதைச்

Umakku Priyamana

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமே
நீரே என் தேவன்
உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே

1. உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா
எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே

2. உமது அன்பை அதிகாலையில்
காணச்செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்டவேண்டும் திவ்யநாதரே
அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே