சங்கரிப்பேன் சங்கரிப்பேன்

Sangarippen Sangarippen

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

சங்கரிப்பேன் சங்கரிப்பேன்
சாத்தானின் கிரியைகளை
கர்த்தர் நாமத்தினால்
கல்வாரி இரத்தத்தினால்

ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன்
திருவசனம் அறிக்கை செய்வேன்

வேதனையில் கூப்பிட்டேன்
பதில் தந்து விடுவித்தார்
என் பக்கம் இருக்கின்றார்
எதற்கும் பயமில்லையே

சுற்றி வரும் சோதனைகள்
முற்றிலும் எரிகின்றன
எரியும் முட்செடி போல்
சாம்பலாய்ப் போகின்றன

கர்த்தரின் வலது கரம்
பராக்கிரமம் செய்கின்றது
மிகவும் உயர்ந்துள்ளது
மிராக்கிள் நடக்கின்றது

சாகாமல் பிழைத்திருப்பேன்
சரித்திரம் படைத்திடுவேன்
கர்த்தர் செய்தவற்றை
காலமெல்லாம் அறிவிப்பேன்