கவலை கொள்ளாதிருங்கள்

Kavalai Kollathirungal

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

கவலை கொள்ளாதிருங்கள்
உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம்-என்று

1. பறக்கும் பறவைகள் பாருங்கள்
விதைப்பதுமில்லை, அறுப்பதில்லை
பரமபிதா ஊட்டுகிறார்
மறப்பாரோ மகனே (ளே)

2. கவலைப்படுவதினால்
நமது உயரத்திலே
ஒரு முழம் கூட்ட முடியுமா
புதுபெலன் பெறவும் கூடுமா

3. நாளை தினம் குறித்து
நம்பிக்கை இழக்காதே
நாளைக்கு வழி பிறக்கும் – நீ
இன்றைக்கு நன்றி சொல்லு

4. தகப்பனின் விருப்பத்தையும்
அவரது ஆட்சியையும்
தேடுவோம் முதலாவது -நம்
தேவைகளை சந்திப்பார் – உயிர் வாழ

5. காட்டு மலர்கள் கவனியுங்கள்
உழைப்பதில்லை, நூற்பதில்லை
உடுத்துகிறார் நம் தகப்பன்
உனக்கு அவர் அதிகம் செய்வார் – உயிர்வாழ