கலங்கி நின்ற வேளையில்

Kalangi Nindra Velaiyil

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

கலங்கி நின்ற வேளையில்
கைவிடாமல் காத்தீரே தகப்பனே, தகப்பனே-2

நீர் போதும் என் வாழ்வில்-4-கலங்கி

1. உடைந்த நொந்த உள்ளத்தோடு
அருகில் நீர் இருக்கின்றீர்-2
தாங்கிடும் பெலன் தந்து
தப்பிச் செல்ல வழி செய்யும்
தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும்

2. துன்பத்தின் பாதையில் நடக்கும் போதெல்லாம்
திருவசனம் தேற்றுதையா-2
தீமைகளை நன்மையாக்கி
தினம் தினம் நடத்திச் செல்லும்
தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும்

3. நித்திய அன்பினால் அன்புகூர்ந்து
உம் பேரன்பால் இழுத்துக் கொண்டீர்-2
காருண்யம் தயவால்
காலமெல்லாம் சூழ்ந்து காக்கும்
தகப்பனே(2) தகப்பனே – நீர் போதும்