எப்பொழுதும் எவ்வேளையும்

Eppozhuthum evvaelaiyum

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

எப்பொழுதும் எவ்வேளையும்
நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
இரவு பகல் எந்நேரமும்
உம் திருநாமம் உயர்த்திடுவேன்

உம்மைப் புகழ்வேன் பெலத்தோடு
உம்மைப் பாடுவேன் சுகத்தோடு

1. தடுக்கி விழுந்த யாவரையும்
தாங்கி நடத்தும் தகப்பன் நீரே
தாழ்த்தப்பட்ட அனைவரையும்
தூக்கி நிறுத்தும் துணையாளரே-உம்மைப்

2. நோக்கிக் கூப்பிடும் அனைவருக்கும்
தகப்பன் அருகில் இருக்கின்றீர்
அஞ்சி நடப்போர் விருப்பங்களை
பூர்த்தி செய்யும் பரிசுத்தரே-உம்மைப்

3. உணவுக்காக உயிரினங்கள்
உம்மை நோக்கிப் பார்க்கின்றன
ஏற்ற வேளையில் உணவளித்து
ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்-உம்மைப்

4. இரக்கம் கிருபை உடையவரே
கருணை அன்பு நிறைந்தவரே
நன்மை செய்யும் நாயகனே
நாவு அனைத்தும் உம்மைப் பாடுமே-உம்மைப்