அத்திமரம் துளிர்விடாமல்

Athimaram Thulir

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும்
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களிகூருவேன்

1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்

2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்

3. எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்

4. உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்