அபிஷேகம் என் தலைமேலே

Abishegam En Thalaimele

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

அபிஷேகம் என் தலைமேலே
ஆவியானவர் எனக்குள்ளே
முழங்கிடுவேன் சுவிசேஷம்
சிறுமைப்பட்ட அனைவருக்கும்

அபிஷேகம் என்மேலே
ஆவியானவர் எனக்குள்ளே

இதயங்கள் நொறுக்கப்பட்டோர்
ஏராளம் ஏராளம்
காயம் கட்டுவேன் தேசமெங்கும்
இயேசுவின் நாமத்தினால்

சிறையிலுள்ளோர் ஆயிரங்கள்
விடுதலை பெறணுமே
கட்டவிழ்க்கணும் கட்டவிழ்க்கணும்
கட்டுக்களை உடைக்கணும்

துதியின் உடை போர்த்தணுமே
ஒடுங்கின ஜனத்திற்கு
துயரத்துக்குப் பதிலாக
ஆனந்த தைலம் வேண்டுமே

கிருபையின் கால இதுவன்றோ
அறிவிக்கணும் அதிவேகமாய்
இரட்சகர் இயேசு வரப்போகிறார்
ஆயத்தமாகணுமே