ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு

Aathumaavae Karththaraiyae

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு (2)

நான் நம்புவது அவராலே(கர்த்தராலே) வருமே வந்திடுமே

1. விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு
விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீ தான் (2)
உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் (2) -நான்

2. உன்னதமான கர்த்தர் கரத்தின்
மறைவில் வாழ்கின்றோம்
சர்வ வல்லவர் நிழலில்
தினம் வாசம் செய்கின்றோம் (2)
வாதை அணுகாது தீங்கு நேரிடாது (2) -நான்

3. பாழாக்கும் கொள்ளை
நோய் மேற்கொள்ளாமல்
பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் (2)
சிறகின் நிழலிலே மூடி மறைக்கின்றார் (2) -நான்

4. கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடம் ஆனார் – நாம்
நம்பியிருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம் (2)
சோதனை ஜெயிப்போம் சாதனை படைப்போம் (2) -நான்

5. நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும்
இறுதிவரை வழிநடத்தும் தந்தை அல்லவா (2)
இரக்கம் உள்ளவர் நம் இதயம் வாழ்பவர் (2) -நான்

Aaththumaavae karththaraiyae Nnokki amarnthiru (2)

naan nampuvathu avaraalae(karththaraalae) varumae vanthidumae

1. vittuvidaathae nampikkaiyai vekumathi unndu
visuvaasaththaal ulakaththaiyae velvathu nee thaan (2)
unakkul vaalpavar ulakai aalpavar (2) -naan

2. unnathamaana karththar karaththin
maraivil vaalkintom
sarva vallavar nilalil
thinam vaasam seykintom (2)
vaathai anukaathu theengu naeridaathu (2) -naan

3. paalaakkum kollai
Nnoy maerkollaamal
paathukaaththu payam neekki jeyam tharukintar (2)
sirakin nilalilae mooti maraikkintar (2) -naan

4. karththar namathu ataikkalamum pukalidam aanaar – naam
nampiyirukkum nam thakappan entu solluvom (2)
sothanai jeyippom saathanai pataippom (2) -naan

5. namathu thaevan ententaikkum sathaakaalamum
iruthivarai valinadaththum thanthai allavaa (2)
irakkam ullavar nam ithayam vaalpavar (2) -naan