ஆபத்து நாளில் கர்த்தர்

Aabathu Naalil Karthar

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

ஆபத்து நாளில் கர்த்தர்
என் ஜெபத்தை கேட்கின்றிர்
யாக்கோபின் தேவனின் நாமம்
பாதுகாக்கின்றது

என் துணையாளர் நீர்தானே
சகாயர் நீர் தானே

நீர்தானே என் துணையாளர்
நீர்தானே என் சகாயர் – ஆபத்து

1. எனது ஜெபங்களெல்லாம்
மறவாமல் நினைக்கின்றீர்
எனது துதிபலியை
நுகர்ந்து மகிழ்கின்றீர் – நீர்தானே

2. இதய விருப்பமெல்லாம்
தகப்பன் தருகின்றீர் – என்
ஏக்கம் எல்லாமே
எப்படியும் நிறைவேற்றுவீர் – என்

3. வரப்போகும் எழுப்புதல் கண்டு
மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்
இரட்சகர் நாமத்திலே
கொடியேற்றிக் கொண்டாடுவோம் – இயேசு

4.திறமையை நம்பும் மனிதர்
தடுமாறி விழுந்தார்கள்
தேவனை நம்பும் நாமோ
தலை நிமிர்ந்து நிற்கின்றோம்