காலா காலங்கள்

Kaalaa Kaalangal

Alwin Paul Isaac

Writer/Singer

Alwin Paul Isaac

பாவமில்லை இனி
சாபமில்லை இனி
மரணமில்லை இனி
கண்ணீரில்ல
துன்பமில்லை இனி
கவலையில்ல இனி
தோல்வியில்லை இனி
தொல்லையில்ல
அடிமையில்லை இனி
வியாதியில்ல இனி
கஷ்டமில்லை இனி
வருமையில்ல

காலா காலங்கள் காத்திருந்தோம்
காதலன் இயேசு பிறந்து விட்டார்
கோடா கோடியாய் தூதர்கள் பாடிட
தூயவர் பிறந்துவிட்டார் - 2
இருள் நீக்கவே அருள் சேர்க்கவே
நமக்காகவே அவர் அவதரித்தார்
பயம் நீக்கவே சுகம் சேர்க்கவே
நமக்காவே அவர் அவதரித்தார்
வானம் பூமி யாவும் அவரைப் பாட
- காலா காலங்கள்

இனி மனிதனும் இறைவனும் இணையலாம்
அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் - 2
அப்பா என அன்புடன் அழைக்கலாம்
பிள்ளை போல் மார்பினில் மகிழலாம் -2
- பாவமில்லை இனி

இனி மரணத்தை ஜெயமென விழுங்கலாம்
மரித்தோரும் உயிருடன் எழும்பலாம் - 2
அவர் நாமத்தில் மீண்டும் பிறக்கலாம்
விசுவாசத்தால் உலகையே ஜெயிக்கலாம் - 2
- காலா காலங்கள்