Song Profile

நெஞ்சமெனும் ஆலயத்தில்

Tamil Christian Songs

Tamil

ந

Alternate Title

Nencamenum Alayattil

About

நெஞ்சமெனும் ஆலயத்தில் வரவேண்டும் இறைவா-உனை தஞ்சமெனத் தேடுமெனில் வரவேண்டும் இறைவா என்னகம் எழுந்து இருள் ஒழித்து விண்ணகம் சேர்க்க வர வேண்டும் மண்ணக இன்ப நினைவழித்து உன்னதம் காண வர வேண்டும் அன்பின் சின்னம் எனில் வளர அன்பனே நீயும் வர வேண்டும் உன்னத வாழ்வில் உனையடைய என்னகம் நீயும் வர வேண்டும் பணிவும் பண்பும் பிறரன்பும் என்னில் நிறைய வர வேண்டும் பிணியும் துயரும் அகன்றிடவே பேரரசே நீ வர வேண்டும்