இயேசு மானிடனாய் பிறந்தார்

Yesu Manidarai Pirandhar

Unknown

Writer/Singer

Unknown

இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்

1. மேய்ப்பர்கள் ராவினிலே – தங்கள் மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனைத் துதித்தனரே – இயேசு

2. ஆலோசனைக் கர்த்தரே
இவர் அற்புதமானவரே
விண் சமாதான பிரபு
சர்வ வல்லவர் பிறந்தனரே – இயேசு

3. மாட்டுத் தொழுவத்திலே – பரன்
முன்னணையில் பிறந்தார் தாழ்மையைப் பின்பற்றுவோம்
அவர் ஏழ்மையின் பாதையிலே – இயேசு

4. பொன்பொருள் தூபவர்க்கம்
வெள்ளைப் போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே
வான சாஸ்திரிகள் பணிந்தனரே – இயேசு

5. அன்னாளும் ஆலயத்தில் அன்று ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே கூறி தூயனைப் புகழ்ந்தனரே – இயேசு

6. யாக்கோபில் ஓர் நட்சத்ரம்
இவர் வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே
நம்மை விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு