ஆவியானவரே உம்மை வாஞ்சிக்கிறேன்
உந்தன் மகிமையின் பிரசன்னம்
நிறைவாய் இறங்கட்டும் இந்த வேளையிலே
1. ஆவியிலே களிகூரவே என்றென்றும் விரும்புகிறேன்
வாஞ்சிக்கிறேன் எந்நாளுமே உந்தன் சமூகத்தையே
நேசர் முகம் காண்கையிலே ஆவியில் நிரம்புகிறேன்
பாடி உம்மை துதிக்கையில் பரவசம் கொள்ளுகிறேன்
ஆவியானவரே
2. தாவீது போல் மகிழ்ந்திடவே சமூகம் வேண்டுகிறேன்
ஆடிப்பாடி துதித்திடவே விடுதலை ஈந்திடுமே
உன்னதத்தில் உம்முடனே உறவாட உதவிடுமே
ஆவிக்குள்ளாய் அனுதினமும் அனல்வுணர்வூட்டிடுமே
- ஆவியானவரே
3. மேல்வீட்டறை அனுபவத்தை என்றென்றும் தந்திடுமே
ஆவிமழை கரைபுரள தேசத்தை சந்தியுமே
தேசமெல்லாம் அசைந்திடவே எழுப்பிடும் வாலிபரை
எழுப்புதலால் புது உள்ளங்கள் உயிர்ப்பிக்க செய்திடுமே
- ஆவியானவரே