என்னைத் தேர்ந்தது நீங்களில்லை

Tiruppali Patal Tokuppu

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

என்னைத் தேர்ந்தது நீங்களில்லை
நான்தான் உங்களை தேர்ந்து கொண்டேன்

நீங்கள் என்னிலும் நானும் உம்மிலும்
கொடியோடிணைந்த நல் கிளைகளாவதால் -- 2
நினைப்பது எல்லாம் நடந்திடும் உண்மை - ஆ..ஆ
நினைப்பது எல்லாம் நடந்திடும் உண்மை
கேட்பது எல்லாம் தந்திடுவார் தந்தை -- என்னைத்

நண்பன் வாழ்ந்திட உயிரைப் பலியென
தந்த ஒருவனே அன்பின் இலக்கணம் ---2
எந்தன் அன்பினையே நீங்கள் அறிந்துள்ளீர் - ஆ..ஆ
எந்தன் அன்பினையே நீங்கள் அறிந்துள்ளீர்
எங்கும் சென்றிதனை தந்துநீர் பலன்பெறுவீர் -- என்னைத்

அடிமை செய்பவன் தலைவன் பணியினை
அறிவதென்பது மரபு இல்லையே --2
எந்தன் பணிகளெல்லாம் நீங்கள் அறிவதனால் - ஆ..ஆ
எந்தன் பணிகளெல்லாம் நீங்கள் அறிவதனால்
நண்பர் என்றிடுவேன் ஊழியர் நீங்களில்லை – என்னைத்