தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து

Thanthita porutkal yaavaiyum eduthu

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து
தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய்

வழங்கிட கனியோ உணவோ இன்றி
வாடிடும் வறியோர் பலர் இறைவா
வெறும் விழிநீர் வியர்வை வேதனை அன்றி
வேறேதும் இல்லா நிலை இறைவா

உனக்கென எம்மை வழங்கிடும் வேளை
உன்னருள் இவர்க்காய் கேட்கின்றோம்
எங்கள் மனம்பொருள் ஆற்றல் அனைத்தையும் இவர் தம்
மனத்துயர் நீங்கப் படைக்கின்றோம்

Thanthita porutkal yaavaiyum eduthu
thanthom thanthaay aetriduvaay

vazhangida kaniye unavo indri
vaadidum variyor palar iraiva
verum vizhineer viyarvai vedhanai andri
verethum illaa nilai iraiva

unakkena emmai vazhangidum velai
unnarul ivarkkaay ketkindrom
engal manamporum aatral anaithayum ivar tham
manathuyar neenga padaikindrom