ஒளியே ஒளியின் ஒளியாம் இறைவொளியை ஏற்றுவோம்

Oliya oliyin oliyam iraivoliyai erruvom

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

எங்கும் ஏற்றுவோம்
வீடுயெங்கும் எங்கள் வீதியெங்கும்
நாடுயெங்கும் இந்த உலகமெங்கும்
இறையின் அருளால் அருளின் ஒளியை ஏற்றுவோம் (3)


1. பார்வை வேண்டி ஒளியை தேடும் கண்கள் கோடி இங்கே
போர்வை மூடி உண்மை மறைத்து வாழும் மனங்கள் இங்கே
ஒளி உண்மை நன்மையாம்
ஒளி நீதி நேர்மையாம் (2)
தனலாய் எரியும் இறையின் ஒளியை ஏற்றுவோம் (3)

2. ஒளியில் வாழும் இறைவன் உறவை
மண்ணில் வளரச் செய்வோம்
ஞான கீதம் எங்கும் முழங்க சேர்ந்து பாடிடுவோம்
ஒளி உணவும் உயிருமாய்
ஒளி வாழ்வும் வழியுமாய் (2)
கதிராய் வீசும் மணமாய் ஒளியை ஏற்றுவோம் (3)

3. ஏழை மனதை மகிழச் செய்ய உதவி புரிந்திடுவோம்
இறைவன் அன்பை பரவச் செய்ய முயற்சி செய்திடுவோம்
ஒளி அன்பும் அருளுமாய்
ஒளி அறமும் செயலுமாய் (2)
மலரும் இறைவனின் அன்பின் ஒளியை ஏற்றுவோம் (3)