இராஜாதி ராஜன் உயிர்த்தெழுந்தார்

Irajati rajan uyirtteluntar

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

அடிமையின் விலங்கினை உடைத்தெரிந்தார்
மரணத்தை வென்றார் மகத்துவம் அடைந்தார்
விடுதலைக் கிடைத்திட உயிர்த்தெழுந்தார்
எழுந்தார் எழுந்தார் உயிர்த்தெழுந்தார்
இறைமகன் யேசு உயிர்த்தெழுந்தார்

ஒரு நாள் மறைவேன் மீண்டும் உயிர்ப்பேன்
புதுயுகம் படைப்பேன் என்றார்
இருளகன்றனவே ... அல்லேலூயா
ஒளி பிறந்தனவே ... அல்லேலூயா
பாறை பிளந்தது, கட்டுகள் அவிழ்ந்தது
கல்லறையிருந்து உயிர்த்தெழுந்தார் - எழுந்தார்

மனுமகன் உதிரம் பாவம் போக்கும்
உயிர்களை காக்கும் என்றார் -2
இறைவாக்கினரும் ... அல்லேலூயா,
மறைவல்லுனரும் ... அல்லேலூயா
அறிவித்த அனைத்தையும் நிறைவேற்றிடவே
பிறந்து இறந்து உயிர்த்தெழுந்தார் - எழுந்தார்

எனது கைகள் நீங்கள் என்றார், புதுமுகம் புனைவீர் என்றார்
தீமை தகர்த்திடவே ... அல்லேலூயா,
அருள் நிறைந்திடவே ...அல்லேலூயா
பகைமைகள் ஒழிந்திட, சுயநலம் மாய்த்திட
புதுயுகம் படைக்க நம்மை அழைத்தார் – எழுந்தார்