சங்கமம் இனிய சங்கமம்

Cankamam iniya cankamam

Tamil Christian Songs

Writer/Singer

Tamil Christian Songs

சங்கமம் இனிய சங்கமம்
ஆண்டவன் நம்மில் சங்கமம்
சங்கமம் இனிய சங்கமம்
நாம் அன்புடன் வாழ்ந்தால் சங்கமம் ....2
அன்புடன் நட்புடன் அனைவரும் வாழ்ந்தால்
ஆண்டவன் நம்மில் சங்கமம்
உண்மையும் அறமும் உறவினில் மலர்ந்தால்
உலகத்தில் இறைவன் சங்கமம் .....சங்கமம்

ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்தால்
சங்கமம் இனிய சங்கமம்
ஒருவரை ஒருவர் மன்னித்து வாழ்ந்தால்
சங்கமம் இனிய சங்கமம் ....2
உடமைகளெல்லாம் பகிர்ந்து வாழ்ந்தால்
சங்கமம் இனிய சங்கமம்
உளமதில் அன்பை உரமாய் கொண்டால்
சங்கமம் இனிய சங்கமம்
உலகத்தில் அமையும் இறைவனின் அரசு
சங்கமம் இனிய சங்கமம் .....சங்கமம்

உயர்ந்தவன் தாழ்ந்தவன் பேதங்கள் அழித்தால்
சங்கமம் இனிய சங்கமம்
உறவினில் பகைமை இல்லையென்றால்
சங்கமம் இனிய சங்கமம் --- 2
இனவெறி அழித்து இன்பமாய் வாழ்ந்தால்
சங்கமம் இனிய சங்கமம்
இறைவார்த்தைகளே வழித்துணையானால்
சங்கமம் இனிய சங்கமம்
இகமதில் அமையும் இறைவனின் அரசு
சங்கமம் இனிய சங்கமம் ....சங்கமம்