வழுவாமல் காத்திட்ட தேவனே

Vazhuvamal Kathitta Dhevane

Johnsam Joyson

Writer/Singer

Johnsam Joyson

வழுவாமல் காத்திட்ட தேவனே
என் வலக்கரம் பிடித்தவரே
வல்லடிக்கெல்லாம் விலக்கி என்னை
வாழ்ந்திட செய்தவரே (2)

ஆயிரம் நாவிருந்தாலும்
நன்றி சொல்லித் தீராதே
வாழ்நாளெல்லாம் உம்மைப் பாட
வார்த்தைகளும் போதாதே (2)
நான் உள்ளளவும் துதிப்பேன்
உன்னதர் இயேசுவே (2)

1.என் மேல் உம் கண்ணை வைத்து
உம் வார்த்தைகள் தினமும் தந்து
நடத்தின அன்பை நினைக்கையில்
என் உள்ளம் நிறையுதே (2) - உம்
அன்பால் நிறையுதே - ஆயிரம்

2.எத்தனை சோதனைகள்
வேதனையின் பாதைகள்
இறங்கி வந்து என்னை மறைத்து
நான் உண்டு என்றீரே (2) - உன்
தகப்பன் நான் என்றீரே - ஆயிரம்