என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா

Ennodu Kooda

Joel Thomasraj

Writer/Singer

Joel Thomasraj

என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா
ஆமென் ஆல்லேலூயா
என்னோடு கூட சேர்ந்து அவரை துதிப்பீர்களா
ஆமென் அல்லேலூயா

நீரே சர்வ வல்ல தேவனே
நீரே நாங்கள் நம்பும் தேவனே
நீரே எங்கள் துதிக்கு பாத்திரர்
ஆமென் அல்லேலூயா

பெயர் சொல்லி அழைத்தவர் அவரே அவரே
நம் தாழ்வில் நினைத்தவர் அவரே அவரே
இம்மட்டும் நடத்தினவர் அவரே அவரே
இனிமேலும் நடத்துபவர் அவரே அவரே

யுத்தத்தில் வல்லவர் அவரே அவரே
யூதாவின் ராஜசிங்கம் அவரே அவரே
சேனைகளின் கர்த்தரும் அவரே அவரே
சர்வத்தை ஆள்பவர் அவரே அவரே