சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்

Serabin Thoodhargal

Gersson Edinbaro

Writer/Singer

Gersson Edinbaro

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2)

பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன் - 2
Verse 1

தழும்புள்ள கரங்களினாலே
காயங்கள் ஆற்றிடுவீரே (2)
கண்ணீரை துருத்தியில் வைத்து
பதில் தரும் நல்லவரே (2)
-பாத்திரர் நீரே-2
Verse 2

சுத்தர்கள் தொழுதிடும் நாமம்
பரலோக தகப்பனின் நாமம் (2)
ராஜ்ஜியம் வல்லமை கனமும்
உமக்கே சொந்தமாகும் (2)
-பாத்திரர் நீரே-2
Verse 3

சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர் (2 )
-பாத்திரர் நீரே-2