பெலனில்லா நேரத்தில் புதுபெலன் தந்து

Belan Thaarumae

Gersson Edinbaro

Writer/Singer

Gersson Edinbaro

பெலனில்லா நேரத்தில் புதுபெலன் தந்து
என்னை நீர் தாங்கிடுமே
திடனில்லா நேரத்தில் திடமனம் தந்து
என்னை நீர் நடத்திடுமே

பெலன் தாருமே பெலன் தாருமே
உம் பெலத்தால் என்னை நடத்திடுமே
Verse 1

எலியாவைப் போல் வனாந்திரத்தில்
களைத்துப் போய் நிற்கின்றேனே
மன்னாவைத் தந்து மறுபடி நடக்கச் செய்யும்
Verse 2

போராட்டங்கள் சூழ்ந்ததாலே
சோர்ந்துபோய் நிற்கின்றேனே
சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே
Verse 3

மனிதர்களின் நிந்தனையால்
மனம்நொந்து நிற்கின்றேனே
மன்னித்து மறக்க உந்தனின் பெலன் தாருமே
Verse 4

மாம்ச எண்ணம் மேற்கொள்வதால்
அடிக்கடி தவறுகிறேன்
பரிசுத்த வாழ்வு வாழ பெலன் தாருமே

பெலன் தாருமே பெலன் தாருமே
உம் பெலத்தால் என்னை நடத்திடுமே

பெலனில்லா நேரத்தில் புதுபெலன் தந்து
என்னை நீர் தாங்கிடுமே
திடனில்லா நேரத்தில் திடமனம் தந்து
என்னை நீர் நடத்திடுமே

பெலன் தாருமே பெலன் தாருமே
உம் பெலத்தால் என்னை நடத்திடுமே