வெற்றி சிறந்தார் சிலுவையிலே

Vetri Siranthaar Siluvaiyilae

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

வெற்றி சிறந்தார் வெற்றி சிறந்தார் சிலுவையிலே
துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்துகொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தார்

ஜெயமெடுத்தார் ஜெயமெடுத்தார்
சிலுவையின் ஜெயம் எடுத்தார்

1. எதிரான சத்துருவின் கிரியைகளை
ஆணியடித்து இல்லாமல் அகற்றிவிட்டார் – நமக்கு
சிலுவை உபதேசம் அது தேவ வல்லமை

2. தண்டிக்கப்பட்டார் சிலுவையிலே நமக்காக
அதனால் நாம் மன்னிக்கப்பட்டோம் இலவசமாய்
பரிசுத்தமானோம் திருரத்தத்தால்

3. நமக்காக காயப்பட்டார் அடிக்கப்பட்டார்
அதனால் நாம் சுகமானோம் தழும்புகளால்
சுமந்து தீர்த்தர் நம் பெலவீனங்கள்

4. சாபமானார் சிலுவையிலே நமக்காக
சாபம் நீக்கி நம்மையெல்லாம் மீட்டு கொண்டு”
சுகம் செல்வம் நம் உரிமை சொத்து

5.ஆடுகள் போல வலி விலகி அலைந்தோம் நாம்
அக்கிரமம் அனைத்தையும் சுமந்து தீர்த்தார்
திருப்பப்பட்டோம் நம் மேய்ப்பரிடம்