திராட்சைச் செடியே

Thiratchai Chediye

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

திராட்சைச் செடியே இயேசு ராஜா
உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்
உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்
திராட்சைச் செடியே இயேசு ராஜா

பசும்புல் மேய்ச்சலிலே
நடத்திச் செல்பவரே
பரிசுத்தமானவரே ஐயா
உள்ளமே மகிழுதையா
உம்மோடு இருப்பதனால்
கள்ளம் நீங்குதையா எனக்கு

குயவன் கையில் உள்ள களிமண் நாங்கள்
ஏந்தி வனைந்திடுமே ஐயா
சித்தம் போல் உருவாக்கும்
சுத்தமாய் உருமாற்றும்
நித்தம் உம் கரத்தில் நாங்கள்

வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்
கனி கொடுக்கும்
சீடர்கள் நாங்கள் ஐயா
வேதத்தை ஏந்துகின்றோம்
வாசித்து மகிழுகின்றோம்
தியானம் செய்கின்றோம் நாங்கள்