தடுக்கி விழுந்தோரை

Thadukki Vizhunthora

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்
தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர்
தகப்பனே தந்தையே
உமக்குத்தான் ஆராதனை

1. போற்றுதலுக்குரிய பெரியவரே
தூயவர் தூயவரே
எல்லாருக்கும் நன்மை செய்பவரே
இரக்கம் மிகுந்தவரே
உம்நாமம் உயரணுமே
அது உலகெங்கும் பரவணுமே

2. உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்
அருகில் இருக்கின்றீர்
கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர்
விருப்பம் நிறைவேற்றுவீர்

3. உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானே
நோக்கிப் பார்க்கின்றன
ஏற்றவேளையில் உணவளித்து
ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்

4. அன்பு கூறும் எங்களை அரவணைத்து
அதிசயம் செய்கின்றீர்
பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்து
பரலோகம் கூட்டிச் செல்வீர்

5. உம் அரசின் மகிமை, மாட்சிதனை
அறிவித்து மகிழ்ந்திடுவேன்
உம் வல்ல செயல்கள் அனைத்தையுமே
தியானித்து துதித்திடுவேன்

Thadukki Vizhunthora
thadukki vilunthorai thaangukireer
thaalththappattaோrai thookkukireer
thakappanae thanthaiyae
umakkuththaan aaraathanai

1. pottuthalukkuriya periyavarae
thooyavar thooyavarae
ellaarukkum nanmai seypavarae
irakkam mikunthavarae
umnaamam uyaranumae
athu ulakengum paravanumae

2. ummai Nnokki mantadum yaavarukkum
arukil irukkinteer
kooppiduthal kaettu, kurai neekkuveer
viruppam niraivaettuveer

3. uyirinangal ellaam ummaiththaanae
Nnokkip paarkkintana
aettavaelaiyil unavaliththu
aekkamellaam niraivaettuveer

4. anpu koorum engalai aravannaiththu
athisayam seykinteer
pattikkonnda yaavaraiyum paathukaaththu
paralokam koottich selveer

5. um arasin makimai, maatchithanai
ariviththu makilnthiduvaen
um valla seyalkal anaiththaiyumae
thiyaaniththu thuthiththiduvaen