பிதாவே ஆராதிக்கின்றோம்

Pithavae Arathikindrom

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்

ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை

1. மகனாக தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே

2. சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே

3. ஸ்தோத்திரமும் கனமும
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்

4. பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே

5. உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்