மறக்கப்படுவதில்லை நீ

Marakkappaduvathillai Nee

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

மறக்கப்படுவதில்லை நீ
என்னால் மறக்கப்படுவதில்லை – 2

கலங்காதே என் மகனே(மகளே)
கைவிட நான் மனிதனல்ல – 2

1.தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை – 2
என் கண்முன்னே நீதானே
உன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே

2.உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்
எதிர்கால பயம் வேண்டாம் – 2
உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2

3.மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
விலகாது என் கிருபை – 2
விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை
எனக்கே நீ சொந்தம் – 2

4.ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரெகோபோத் தொடங்கிவிட்டது – 2
நீ பலுகி பெருகிடுவாய்
நீ குறுகி போவதில்லை – 2

(பின்வருமாறு பாடலாம்)

மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை

கலக்கமில்லை கவலையில்லை
கைவிட நீர் மனிதனல்ல

1. தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
உம் கண்முன்னே நான்தானே
என்னை நீர் உருவாக்கினீர்