மகிமையின் நம்பிக்கையே

Magimaiyin Nambikkaiye

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்
உலகத்தில் வெற்றிக் கொண்டேன்

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
தூயவர் உம்மை நான் பாடுவேன்

ஆத்துமாவின் நங்கூரமே
அழிவில்லா பெட்டகமே
நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
நிம்மதியின் கன்மலையே

நல் மேய்ப்பரே நம்பிக்கையே
நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
உம் தோளில் தான் நானிருப்பேன்

பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பயமில்லை பாதிப்பில்லை
உம் குரலோ கேட்குதையா
உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா

பிரகாசிக்கும் பேரொளியே
விடிவெள்ளி நட்சத்திரமே
உம் வசனம் ஏந்திக் கொண்டு
உலகெங்கும் சுடர்விடுவேன்