செடியே திராட்சை செடியே

Chediye Thiratchai Chediye

Fr S J Berchmans

Writer/Singer

Fr S J Berchmans

செடியே திராட்சைச் செடியே
கொடியாக இணைந்து விட்டேன்

உம் மடிதான் என் வாழ்வு
உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு

கத்தரித்தீரே தயவாய்
கனிகள் கொடுக்கும் கிளையாய்
சுத்தம் செய்தீரே இரத்தத்தால்
சுகந்த வாசனையானேன்

பிதாவின் மகிமை ஒன்றே
பிள்ளை எனது ஏக்கம்
மிகுந்த கனிகள் கொடுப்பேன்
உகந்த சீடனாவேன்

ஆயன் சத்தம் கேட்டு
உம் அன்பில் நிலைத்து வாழ்வேன்
பிரிக்க இயலாதையா
பறிக்க முடியாதையா