Bethel Tamil Christian Church

, Zürich, Switzerland

Contact

Zelgstrasse 25
Zürich, Switzerland

Services

Every Week @ 16:00

Bethel Tamil Christian Church has been called by the saving and sustaining Grace of the Trinitarian God. We exist to declare and demonstrate the liberating power of the Gospel. We live by faith, we desire to be known by love, and to be a voice of hope, in the society where God has placed us.
எங்களைப் பற்றி

பெத்தேல் திருச்சபையானது நம்மை இரட்சிக்கிற, தாங்குகிற திரியேக தேவனின் கிருபையால் அழைக்கபட்டதாகும். இத்திருச்சபை வாழ்வின் நோக்கம் கிறிஸ்துவின் சுவிஷேசத்தின் வல்லமையை அறிவித்து உலகெங்கும் காட்டுவதே. கர்த்தரால் நிறுவப்பட்ட சமுதாயத்தில் இத்திருச்சபை விசுவாசத்தில் வாழவும், அன்பினால் அறியப்படவும், நம்பிக்கையின் குரலாக செயல்படவும் குறிக்கோளாக கொண்டுள்ளது.

கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப் போல் இருப்பார்கள். (சங்கீதம். 125:1)
திருச்சபையை பற்றி சில தகவல்கள்

பெத்தேல் திருச்சபையானது Pastor. Freddie Moses அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு Zurich மையப்பகுதியில் உள்ள Schmiede Wiedikon என்ற இடத்தில் 1998ம் ஆண்டு முதல் இயங்கிவருகிறது. நாங்கள் தமிழ் மக்கள் மத்தியில் கர்த்தருடைய ஊழியத்தை செய்து வருகிறோம். ஒரு சிறு கூட்டமாக தேவனை ஆராதித்து வந்ந நாம் தேவ கிருபையினால் பெருகிவரும் தேவசபையாயிருக்கிறோம். மேலும் பெருகி விருத்தியடைந்து வருகிறோம். இதற்கு மூலஉபதேச சத்தியங்களைக்கொண்ட உபதேசமே காரணமாகும்.

மாதந்தோறும் முதல் வாரத்தில் இராபோஜனவிருந்தும், ஒவ்வொரு செவ்வாய் கிழமைகளில் ஜெபமும் முதல் மற்றும் மூன்றாம் வாரங்களில் உபவாச கூட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நம் இருதயங்கள் பொருளாசையில் சாராமலும் மோசம்போக்கும் உலக மாயையின் பின் செல்லாமல் இயேசுகிறிஸ்துவின் இரகசிய வருகைக்கு நேராக நடத்தும் சத்திய உபதேசங்கள் ஒவ்வொரு ஞாயிறு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. பெத்தேல் கிறிஸ்தவ சபையை கர்த்தர் தாம் வாக்குத்தத்தம் பண்ணிய தம்முடைய வார்த்தையின் படியே தமது திருச்சபையை ஆசீர்வதித்து வருகிறார். அவருக்கே ஸ்தோத்திரம்.

இயேசுவை அறியாத மக்களிடையே துண்டுப் பிரதி மற்றும் ஒலிநாடாக்கள் மூலம் இயேசுவை அறிவித்து வருகின்றோம். கண்ணீர் கவலையோடு வியாதியோடு வாழ்பவர்களுக்காக ஜெபித்தலும், ஆலோசனை நாடி வருவோருக்கு ஆலோசனை வழங்குதல். நற்செய்திக் கூட்டங்கள் நடத்துதல் போன்ற ஊழியங்களை பெத்தேல் தமிழ் கிறிஸ்தவ சபை மூலமாக செய்து வருகின்றோம்